பாடசாலைக் கீதம்
திருமிகு மெங்கள் யாழ்நகர்க் கணியாய்த்
திகழ்ந்திடுங் கல்லூரி எங்கள்
பெருவருமிந்துப் பெண்களுக் கொளியாய்
பிறங்கிடும் கல்லூரி உயர்
மருவுறு கலைகள் யாவையு மின்பாய்
வழங்கிடுங் கல்லூரி – உனைப்
பெருகிடும் அன்பால் புந்தியில் வைத்துன்
புகழினை வாழ்த்தோமோ – உனை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கோமோ.
இந்து மதப் புகழ் எங்கும் விளங்கிட
இசைந்திடும் கல்லூரி – உயர்
சிந்தை வளம் பெற மெய்ப் பொருளைறிவைச்
சேர்த்திடுங் கல்லூரி – வளர்
செந்தமிழ் ஆங்கில வடமொழி அறிவைச்
சுரந்திடுங் கல்லூரி – உனை
வந்தனை செய்து பைந்தமிழ் மாலை
வாழ்த் தொடு சூடோமோ – உனை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கோமோ.
மங்கையர் மாண்பை மன்பதை அறிய
முழங்கிடுமங் கல்லூரி – ஒளி
பொங்குயர் அறிவூச் சுடரினை யூளத்திற்
பொறித்திடுங் கல்லூரி - இந்து
நங்கையர் வாழ்வின் லட்சிய மனைத்தும் நல்கிடுங் கல்லூரி – உனை
அங்கையில் மலர்கொண் டன்புடன் பாடி
அனுதினம் ஏத்தோமோ - உனை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கோமோ.
கலைமகள் உலவக் களிநடம் புரியக்
கண்டிடுங் கல்லூரி – என்றும்
மலைமகள் கொழுநன் மலரடி போற்றி
மாண்புறுங் கல்லூரி – நித்தம்
நிலமகள் நெற்றித் திலகமென் றேத்த
நிலைத்திடுங் கல்லூரி – உனை
தலைமுறையாகத் தொழுதுளங் குளிரத்
துதி சொல்லிப் பாடோமோ – உனை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கோமோ